கல்லூரி மாணவர்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் ஊக்கத்தொகை..!! புதுச்சேரி அரசு அறிவிப்பு..!!
புதுச்சேரியில் குடும்ப தலைவிக்கு மாதத்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1000லிருந்து 2500 ஆக உயர்த்தி வழங்கப்படும், அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் மாதத்தோறும் 2 கிலோ இலவச கோதுமை வழங்கப்படும், கல்லூரி மாணவர்களுக்கு மாதத்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என பல்வேறு அறிவிப்புகளை பட்ஜெட்டில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியின் 15வது சட்டபேரவையின் 6வது கூட்டத்தொடர் கடந்த திங்களன்று தொடங்கியது, ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்றைய தினம் துணைநிலை ஆளுநர் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து நேற்றைய தினம் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து உறுப்பினர்கள் பேசினர். தொடர்ந்து 2025-2026ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார்.
13,600 கோடிக்கு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அனைத்து விவசாயிகளுக்கும் மழைக்கால நிவாரணமாக ரூ.2000 ஆண்டுதோறும் வழங்கப்படும், புதுச்சேரியில் உள்ள அருங்காட்சியங்கள் மத்திய அரசின் நிதி உதவியுடன் புணரமைக்கப்படும், அனைத்து குடும்பங்களுக்கும் மாதத்தோறும் இலவச அரிசி வழங்கப்படுவதுபோல் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் 2 கிலோ கோதுமை மாதத்தோறும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அதேப்போல் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 3 நாட்களுக்கு வழங்கப்பட்டு சத்துணவுடன் கூடிய முட்டை இனி வாரத்தின் அனைத்து நாட்களிலும் வழங்கப்படும், அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வரை படித்துவிட்டு இளநிலை கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதத்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும்,
முதியோர் ஓய்வூதியம் பெறும் மீனவ குடும்பத்தினர் இறந்தால் வழங்கப்படும் ஈமச்சடங்கு நிதி 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அதேப்போல் கிழக்கு கடற்கரை சாலையில் புதிதாக அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் வைக்கப்படும் எனவும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2 கோடியில் இருந்து 3 கோடியாக உயர்த்தி வழங்கப்படும், புதுச்சேரியில் எந்த உதவித்தொகையும் பெறாமல் குடும்ப தலைவிக்கு வழங்கப்படும் ரூ.1000 2500 ஆக உயர்த்தி வழங்கப்படும், புதுச்சேரியில் வழங்கப்பட்டு முதியோர், கணவரால் கைவிடப்பட்டோர், விதவைகள் உதவித்தொகைகள் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
சுமார் 1 மணி நேரம் 10 நிமிடம் பட்ஜெட்டை முதலமைச்சர் தாக்கல் செய்து முடித்த நிலையில் தொடர்ந்நு சபையை நாளை காலை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் செல்வம் ஒத்திவைத்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..