உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
விருதுநகர் மாவட்டத்தில் சரஸ்வதி அம்மாள் ஆங்கில மேல்நிலைப் பள்ளி மற்றும் லயன்ஸ் கிளப் ஆப் விருதுநகர் இணைந்து நடத்திய, குழந்தைகள் பாதுகாப்பு, போதை விழிப்புணர்வு, மற்றும் சமூக நலக் குறித்த விழிப்புணர்வு பேரணியை மேற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் நம்பிராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையத்தை கலைஞர் நகபுர மேம்பாட்டு திட்டத்தின் 4 கோடியே 64 லட்சம் மதிப்பில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக பழைய கட்டிடங்கள் அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பேருந்து வந்து செல்வதறக்கு ஏதுவாக மாற்று பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்ப்பதாக ஊரக நல பணிகள் இணைய இயக்குனர் ஞான மீனாட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அரசு மருத்துவர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் மேற்கொண்ட சோதனையில் கவுண்டப்பனூர் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன், போலி மருத்துவர் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தலைமை மருத்துவர் அளித்த புகாரின் பேரில் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தண்டரை புதுச்சேரி கிராமத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் சார்பில், அவசரகால ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு முகாமை கிராம மக்கள் முன்னிலையில் சிறப்பாக நடத்தி காண்பித்தனர். பின்னர் அவசரகால மருத்துவ முதலுதவிகள் குறித்தும் செயல்முறை விளக்கத்துடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தர்மபுரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஈச்சம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியின் மேற்கூரை சேதமடைந்துள்ளது. இதனால் 58 மாணவ மாணவிகளும் ஒரே வகுப்பில் தற்போது தற்காலிகமாக பாடம் கற்பித்து வருகின்றனர். எனவே, இதுகுறித்து பள்ளி கல்வித்துறை மற்றும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த இச்சிபுத்தூர் பகுதியில் இயங்கி வரும் எம்ஆர்எப் தனியார் டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் சம வேலை சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிரைவேற்றி வலியுறுத்தி, ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் அடுத்த வக்கீல் அய்யர் தோப்பு பகுதியை சேர்ந்த விவசாயி பன்னீர், தனது விவசாய கிணற்றின் அருகேயுள்ள உயர் மின் அழுத்தம் கம்பிகள் மிக மோசமான நிலையில் சிதலமடைந்து கிடைப்பதால், இதனை மாற்றி தரக்கோரி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..