அதிக வட்டியுடன் கூடிய பணம்…!! ஆனால் கடைசியில்..!! போலிஸ் வலைவீச்சு..!!
திருப்பூரில் நிதி நிருவனம் என்ற பெயரில் மோசடி செய்து அதிக வட்டி கொடுப்பதாக கூறி ரூ.20 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்
மதுரையை சேர்ந்த முத்தையன் இவர் திருப்பூர் குமார் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்., கடந்த 2018-ம் ஆண்டில் திருப்பூர் பி.என். ரோட்டில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ள நிலையில். தனது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிகவட்டி கொடுப்பதாக ஆசைவார்த்தைகள் கூறி விளம்பரம் செய்துள்ளார். அதை நம்பி பலரும் இவருடைய நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர். முதல் இரண்டு ஆண்டுகள் பணம் ஒழுங்காக தரப்பட்ட நிலையில் அதை நம்பிய அபுத்தி மக்கள் அந்த நிறுவனத்தில் மீண்டும் தங்களது பணத்தை முதலீடு செய்துள்ளனர்..
அதன் பின் கொரொனோ காலம் என்பதால் பணத்தை இவர்களுக்கு அறிவித்தபடி வட்டியுடன் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.. இப்படியே சில ஆண்டுகள் செல்ல பணத்தை கேட்டு அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்ட நிலையில் கடந்த மாதம் பணத்தை வட்டியுடன் தருவதாக தெரிவித்திருந்த நிலையில் பணத்தோடு தலைமறைவாகியுள்ளனர்…
அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு முருகானந்தம் மேற்பார்வையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் 120-க்கும் மேற்பட்டவர்களிடம், அதிக வட்டி கொடுப்பதாக கூறி ரூ.20 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முத்தையன், அவருடைய மனைவி மஞ்சு, மகன் கிரண்குமார் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முத்தையன்(48), மனைவி மங்சு(47), மகன் கிரண்குமார் (22) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கார்கள் மற்றும் 58½ பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.