சமூக வலைத்தளம் மூலம் இளம் பெண்ணிடம் பணமோசடி..!! ஏமாற்றத்தால் இளம்பெண் தற்கொலை..!!
சென்னை ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டையை சேர்ந்த 20 வயது அஸ்வினி என்ற இளம்பெண் பெண்கள் அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.., இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களின் ஒன்றான இன்ஸ்டா மூலம் ஒரு நபர் அறிமுகமாகியுள்ளார்.
சில மாதங்கள் இருவரும் இன்ஸ்ட்டாவில் சாட் செய்து வந்துள்ளனர்.., பின் ஒரு நாள் உன்னை எனக்கு பிடித்திருக்கிறது.., நான் உன்னை திருமணம் செய்துக்கொள்ள ஆசைபடுகிறேன், நான் இப்போது வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன் தமிழ்நாடு திரும்பியவுடன் உன்னை திருமணம் செய்துக்கொள்ள ஆசைபடுகிறேன் என கூறியுள்ளார்.
எதோ தவறு நடப்பதை உணர்ந்த அஸ்வினி மர்ம நபர்களிடம் இருந்து விலக ஆரமித்துள்ளார்.., இருப்பினும் அந்த மர்ம நபர் வாட்ஸ் ஆப் வாயிலாக தொடர்ந்து கால் செய்து தொந்தரவு கொடுத்துள்ளார்.., இந்நிலையில் கடந்த 6ம் தேதி ஒரு மர்ம கும்பல் அஸ்வினியை தொடர்பு கொண்டு 15 யூரோ டாலர் பரிசாக அனுப்பியுள்ளோம் என கூறியிருக்கிறார்.
அப்போது அந்த மர்ம கும்பலில் ஒருவர் சுங்க துறை அதிகாரி போல் பேசி 25 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும்.., பணம் செலுத்தியும் பொருள் திரும்ப வரவில்லை என்றால் மீண்டும் 45 ஆயிரம் நீங்கள் கட்ட வேண்டும். இதற்கு மறுப்பு தெரிவித்தால் நீங்கள் சிறை செல்ல வேண்டியிருக்கும் என பணம் கேட்டு மிரட்டி இருக்கின்றனர்.
அதில் மனஉளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட அஸ்வினி.., கடந்த ஜூலை 6ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.., தற்கொலை குறித்து காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப் பட்டுள்ளது.
தகவலின் பெயரில் அங்கு வந்த போலீசார்.., சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின் சிறுமியின் செல்போனை ஆய்வு செய்த காவல் துறையினர் மேற்கண்ட சம்பவம் பற்றி விவரம் அறிந்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை செய்த போலீசார்.., அஸ்வினி அந்த மர்ம நபரின் எண்ணிற்கு 25,000 ரூபாய் பணம் அனுப்பி வைத்திருப்பது தெரியவந்தது. பின் அந்த செல்போன் எண்ணை ட்ராக் செய்த போது அந்த மர்ம நபர் டெல்லியில் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து அந்த மர்ம நபர் பெயர் “மோஸோ வயது 30” என தெரிய வந்தது. இவர் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர் ஓராண்டு விசா மூலம் டெல்லி வந்துள்ளார் என்பது தெரியவந்தது.., இவருடன் மற்றொரு பெண்ணுக்கும் அதில் தொடர்பு உள்ளது என தெரிய வந்தது.
இந்த மோசடி கும்பல் பல பெண்களிடம் இதே வேலையை செய்து வந்திருப்பதும் தெரிய வந்தது.., இரண்டு வங்கி கணக்குகள் வைத்து மாற்றி மாற்றி பண மோசடி வழக்கில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இவர்கள் பற்றிய விவரம் மற்றவர்களுக்கு தெரிந்து விட கூடாது என்பதர்காக பல சமூக வலைத்தள ஐடி உபயோகித்ததுடன் இரண்டு வங்கி கணக்கு வைத்து மாற்றி மாற்றி பண மோசாடி செய்துள்ளனர். அதிக பணம் வைத்திருப்பதும் ஆபத்து என உணர்ந்து அந்த பணத்தையும் ஆப்பிரிக்காவில் மற்றொரு வருக்கு பண பரிவர்த்தனை செய்துள்ளனர்.
எனவே டெல்லி சைபர் கிரைம் போலீசார் அவர்களை கைது செய்து பல விசாரணைகளை நடத்தி வருகின்றனர்,