மாவீரனின் படத்திற்கு குவியும் பாராட்டுக்கள்..!! ஒரே நாளில் ஒரு கோடி வசூல் சாதனை..!!
மூன்றே “3” விஷயங்களை மட்டும் தெரிந்து கொண்டு.., ” மெரினா “வில் கால் பதித்து.., அவமானம், தோல்வி, வலிகள், துரத்தியபோது ஒரு ஓட்டம் எடுத்து. பேசியவர்கள் முன் சில “எதிர்நீச்சல்” போட்டு, தற்காப்புக்காக ” மான் கராத்தே ” கற்றுக்கொண்டு, ஊருக்குள்ளே ” வருத்தப்படாத வாலிபர் சங்கம்” வைத்து கொண்டு.
சில சமையம் காதல் ” ரெமோ ” வாக அவதரித்து, என்ன தான் “நம்ப வீட்டு பிள்ளை ” என்று சொன்னாலும்.., பலருக்கு இவர் ஒரு “டான்“.., ” டாக்டர் ” ஆக ஆசைப்பட்டேன் ஆனால் “ஹீரோ” வாக வேண்டும் என்ற கனவால்.., அயராத உழைத்தேன், அதற்கு அன்று கிடைத்த பெயர் “வேலைக்காரன்” இன்று நான் மக்கள் போற்றும் “மாவீரன்“..,
மண்டேலா படத்திற்காக தேசிய விருதை பெற்றவர் இயக்குனர் மடோன் அஸ்வினி, இவரின் அடுத்த படைப்பாக மாவீரன் படத்தை இயக்கினார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், மற்றும் யோகிபாபு மற்றும் பரத் ஷங்கர் இசையுடன் பலரும் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் நடிப்பில் இதற்கு முன் வெளியான பிரின்சஸ் படம் சரியான வெற்றி கிடைக்காததால், அடுத்த படத்தை வெற்றி படமாக மாற்ற முயற்சி செய்துள்ளார்.
அதற்கான முழு கட்ட முயற்சி தான் மாவீரன் திரைப்படம்.., ஒரு சிறப்பான குழு.., அதற்கு ஏற்ற கதை, கதைக்கு ஏற்ற கதாபாத்திர நடிகர்கள் என அனைவரின் நடிப்புடன் தொடங்கப்பட்ட திரைப்படம் ஜூலை 14ம் தேதி வெளியானது..,
சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட ட்ரைலர், பல மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்தது, ட்ரைலரை பார்த்து விட்டு ரசிகர்கள் கொடுத்த கமெண்ட் சிவ கார்திகேயனிற்கு உற்சாகத்தை கொடுத்தது.
ஒரு ப்ரோமஷினில் கூட “போனதடவ மிஸ் ஆயிடுச்சு ஆனா இந்த தடவ மிஸ்ஸே ஆகாது” என சிவகார்த்திகேயன் கூறினார்.., இந்த வார்த்தை இன்னும் படம் எப்பொழுது வெளியாகும் என்ற ஆவலை தூண்டியுள்ளது.
டாக்டர் படத்தை போன்றே இந்த படத்திலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த புது வித நடிப்பில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயனின் நடிப்பில் ஜூலை 14ம் தேதி படம் வெளியான ஒரே நாளில் 1கோடியை வசூல் செய்துள்ளது.
மேலும் படம் வெளியாகி இன்றுடன் 3வது நாள், ஆனால் இன்று வரை ஒருவர் கூட நெகடீவ் பதில் சொல்லாமல்.., அனைவரும் படம் சூப்பர்.., சிவகார்த்திகேயன் சொன்னது போல இது அவரின் வெற்றி படம் தான் என்று பாசிட்டிவ் ஆக பேசி வருவது.., சிவகார்த்திகேயனுக்கு இன்னும் ஊக்கம் கொடுத்துள்ளது.
இந்நிலையில் ஒரே நாளில் ஒரு கோடி வசூல் ஆனது மாவீரன் படக்குழுவினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் ஒரு கோடி வசூல் அள்ளியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
Discussion about this post