வரும் 2026ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் விளையாடுவேன்று என்று பாகிஸ்தான் வேகப்பபந்து வீச்சாளர் முகமது அமீர் கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து ஐ.பி.எல் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தனர். அப்போது, முதல் பாகிஸ்தான் வீரர்கள் இல்லாமல்தான் ஐ.பி.எல் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது அமீர் 2026ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் தனக்கு விளையாட கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
முகமது அமீர் கடந்த 2024ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் குடியுரிமையை ரத்து செய்து விட்டு பிரிட்டன் குடியுரிமை பெற அவர் திட்டமிட்டுள்ளார். இவரின், மனைவி நர்ஜின் காதுன் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 2012ம் ஆண்டு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அசார் முகமது பிரிட்டன் குடியுரிமையை பெற்று ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்றார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இவரை ஏலம் எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும் இவர் விளையாடியுள்ளார்.
ஆனால், இப்போதுள்ள நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பிற நாட்டு குடியுரிமை பெற்றாலும் ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.