பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மோடி..!
மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளில் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. அந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளில் நேற்று வெளியானது. அதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பா ஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
மத்தியில் ஆட்சியமைப்பதற்கு 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற சூழல் இருப்பதால், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் பதவியை நரேந்திர மோடி ராஜினாமா செய்துள்ளார். அதற்கான ராஜினாமா கடிதத்தை இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கினார். ராஜினாமா கடிதத்தை மோடி வழங்கியபோது, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
“மோடியின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இதனிடையே, நரேந்திர மோடி வருகின்ற 8ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனித்து 240 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவு இருப்பதால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியால் ஆட்சியமைக்க முடியும். பிரதமர் மோடி விரைவில் ஆட்சியமைக்க குடியரசு தலைவரிடம் உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க இருக்கும் பட்சத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் இரண்டாவது தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
– லோகேஸ்வரி.வெ