மோடி அரசு அதானி குழுமத்திற்கு மட்டுமே சலுகை கொடுக்கும்..!! ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு..!!
மின் உற்பத்தி துறையில் அதானி குழுமத்துக்கு மட்டுமே சலுகை வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஆஸி.யில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்து ஜார்க்கண்டில் மின் உற்பத்தி செய்து வங்கதேசத்துக்கு அதானி குழுமம் விற்ப்பதாகவும் இந்தியாவில் தற்போது மின்சாரத்தை விநியோகிக்கவும் அதானி குழுமத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்..
தனக்கு நெருக்கமானோருக்கு சலுகை வழங்குவதில் பிரதமர் மோடி மின்னல் வேகத்தில் செயல்படுவதாகவும் அதானி குழும நிறுவனத்துக்காக இந்தியாவின் ஏற்றுமதிக்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்
ஏற்றுமதி விதிகள் திருத்தத்தால் அதானி குழுமம் வங்கதேசத்துக்கு பதில் இந்தியாவிலேயே மின்சாரம் விற்க சலுகை அளிக்கப்பட்டுள்ளதாகவும் வங்கதேசத்துக்கு மின்சாரம் விற்க அதானி குழுமம் ஒப்பந்தம் செய்து விநியோகித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்
வங்கதேசத்தில் நிலவும் வன்முறை மற்றும் அசாதாரண சூழல் காரணமாக அங்கு மின்சாரம் விற்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் வங்கதேசத்துக்கு அதானி குழுமம் மின்சாரம் விற்க முடியாததால் இந்தியாவிலேயே விற்கும் வகையில் மோடி அரசு சலுகை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்
2018-ம் ஆண்டின் மின் உற்பத்தி சார்ந்த ஏற்றுமதி விதிகளில் ஒன்றிய மின்துறை அமைச்சகம் ஆகஸ்ட் 12-ல் திருத்தம் செய்ததாகவும் ஜார்க்கண்ட் மாநிலம் கோடாவில் உள்ள அனல் மின்நிலையத்தில் அதானி நிறுவனம் 1,600 மெகாவாட் மின்உற்பத்தி செய்து வருவதாகவும் ஜார்க்கண்டில் உற்பத்தி செய்யும் 1,600 மெகாவாட் மின்சாரத்தையும் அண்டைநாடான வங்கதேசத்துக்கு அதானி குழுமம் விற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் அண்டை நாட்டிற்கு பிரத்தியேகமாக மின்சாரம் வழங்கும் இந்திய மின் உற்பத்தி நிலையங்கள் (கள்) தொழில்நுட்ப மற்றும் மூலோபாயக் கருத்தில் கொண்டு அண்டை நாட்டின் பரிமாற்ற அமைப்புடன் இணைக்க அர்ப்பணிக்கப்பட்ட டிரான்ஸ்மிஷன் லைனை உருவாக்க அனுமதிக்கப்படலாம்.
இந்தியாவிற்கும் அண்டை நாடுகளுக்கும் இடையே கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ளமைக்கப்பட்ட செலவில், மின்சாரச் சட்டம், 2003 இன் கீழ் உள்ள விதிகளின்படி, நியமிக்கப்பட்ட ஆணையத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு, அத்தகைய பிரத்யேக டிரான்ஸ்மிஷன் லைன் கட்டுமானம் அனுமதிக்கப்படும். .
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..