மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய மோடி…!!! தூத்துக்குடியில் ஸ்டாலின் பிரச்சாரம்..!!
வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் ஸ்டாலின் பிரச்சாரம் :
அதனையொட்டி தூத்துக்குடியில் இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்த பிரச்சாரம் செய்தார்.., அப்போது பேசிய அவர்,
எடப்பாடி விமர்சனம் :
எடப்பாடி பழனிசாமி குறித்தும் அதிமுக அரசை குறித்தும் வெகு விமர்சித்துப் பேசினார். குறிப்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை நினைவுகூர்ந்த அவர், துப்பாக்கிச் சூடு சம்பவத்தை எடப்பாடி தொலைக்காட்சியில் பார்த்து சம்பவம் பற்றி தெரிந்து கொண்டதாக பச்சையாகப் பொய் கூறுகிறார்.
மோடி அரசின் அலட்சியம் :
தமிழக மீனவர்களின் நலனைக் காக்கத் தவறிய மோடி அரசு.., இலங்கையில் தமிழக மீனவர்கள் கடற்படையினாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போல அவர் பேசுகிறார். கடற்கரை எல்லையில் நடப்பது எல்லாம்,
கைது, அபராதம், படகுகள் பறிமுதல்.., மீனவர்கள் சுட்டுகொலை என இதுபோன்ற வன்மம் மட்டுமே மோடி ஆட்சியில் நடக்கிறது.
மீனவர்களின் நலன் குறித்து எந்த ஒரு அக்கறையும் மேற்கொள்ளத அவர்.., இனிமேல் எப்படி மக்கள் மீது அக்கறை கொண்டு செயல்படுவார். குறிப்பாக தமிழக மீனவர்கள் மீது அறிவிக்கபடாத போரை நடத்தினார்.
விஸ்வகுருவா அல்லது மவுன குருவா :
மீனவர்கள் விவகாரத்தில் வாய் திறக்க மறுக்கும் பிரதமர் மோடியைப் பார்த்து பொதுமக்கள் நீங்கள் விஸ்வகுருவா அல்லது மவுன குருவா எனக் கேட்கிறார்கள்.. கச்சத்தீவு மீட்கப்படும் என சொன்னார், ஆனால் சுஷ்மா சுவராஜ் விவகாரம் என்ன ஆனது. தற்போது வரை அந்த வாக்குறுதியை பாஜக அரசு நிறைவேற்றவில்லை.
மீனவர்கள் நலனைக் காக்கத் தவறிய பிரதமர்மோடி எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமிழகத்திற்கு வாக்கு கேட்டு வருகிறார்.
இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.
மத்திய அரசு தமிழகத்திற்காக இதுவரை என்ன தான் செய்துள்ளது.
பிரதமரின் வீடு திட்டம் :
தமிழகத்தில் பிரதமரின் வீடு என்ற பெயரில் வீடு கட்டி தருவதாக சொன்னார்கள், பெயருக்கு தான் அது பிரதமரின் வீடு கட்டும் திட்டம். ஆனால் இத்திட்டத்தில் அளிக்கும் நிதியுதவியோ சுமார் 60% நிதியை மாநில அரசு தான் தருகிறது. வாயால் வடை சூடும் நபராக பிரதமர் மோடி மாறிவிட்டார்.
விவசாய சட்டம்:
விவசாயிகளுக்கு எதிராக சில விவசாய சட்டங்களைக் கொண்டு வந்தார். அந்த சட்டங்களை நிறுத்தகோரி பல விவசாயிகள் மாவட்டம் முழுதும் போராட்டம் நடத்தினார்கள்.
அந்த திட்டத்தை நிறுத்தாமல், எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். அதற்கும் மோடி அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
மத்திய அரசு சட்டம் :
தமிழ்நாட்டிற்கென எந்த ஒரு சிறப்புச் சட்டத்தையும் மத்திய அரசு செய்யவில்லை
அதை பற்றி கேட்டாலும் அவர்கள் பதில் அளிப்பதில்லை, ஆனால் மேடைக்கு மேடை நாங்கள் அதை செய்வோம், இதை செய்வோம் என பேசுகிறார்.
பின் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த திட்டங்களைப் பட்டியலிட்டார். மேலும், தமிழக அரசு கொண்டு வந்த திட்டங்கள் மூலம் மக்கள் மிகப் பெரிய பலன் அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இத்திட்டங்களுக்காக பொதுமக்கள் திமுக அரசுக்கு நன்றி தெரிவித்து வருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.
ராமேஸ்வரம் தனுஷ்கோடி இணைப்பு :
“ராமேஸ்வரத்தை உலக சுற்றுலாத் தலமாக மாற்றிக் காட்டுவோம் என சொன்னார்கள் ஆனால் அதை அவர்கள் செய்து முடித்தார்கள்..? இல்லை.
தாரா.. ராமேஸ்வரம்- தனுஷ்கோடியை இணைப்போம் என சொன்னார்கள், ஆனால் அதையும் செய்யவில்லை..
ராமேஸ்வரத்திற்கும் தனுஷ்கோடிக்கும் தூரம் இல்லை.. மோடிக்கும் தமிழ்நாட்டிற்கும் தான் தூரம்” என பிரதமரை விமர்சித்து பிரச்சாரம் செய்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..