20 வருடமாக சொந்த மகனுக்கே தெரியாமல் ஏழையாக வாழ்ந்த பில்லியனர்..!!
சீன நாட்டை சேர்ந்த ஒருவர் 20 வருடங்களாக தான் ஒரு பணக்காரர் என்பதே தெரியாமல் தன் மகனை வளர்த்துள்ளார். கல்லூரி வாழ்க்கையை தன் மகன் முடித்தபின் இந்த ரகசியம் அம்பலமானது அங்குள்ள மக்கள் மட்டும் அல்லாமல் நாடே ஆச்சரியப்பட்டது.
சீன நாட்டில் ஹுனான் பகுதியில் உள்ள பிங்ஜாங் நகரில் வசிக்கும் ஜாங் யூடாங் என்பவரின் மகன் ஜாங் ஜிலாங். ஜாங் யூடாங், மாலா பிரின்ஸ் என்ற பிரபலமான மசாலா பொடி உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் அதிபர். அண்மையில் ஜாங் யூடாங் தனது மலைக்க வைக்கும் சொத்து விவரத்தை வெளியிட்டார்.
இச்செய்தி அவரது மகன் ஜாங் ஜிலாங்குக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. 20 வருடங்களாக தந்தையின் சொத்து விவரங்கள் பற்றி எதையும் அவர் அறிந்து கொண்டதில்லை. அந்தளவுக்கு ஜாங் யூடாங் அதை ரகசியமாக வைத்திருந்தார்.
நிஜத்தில் அவரது குடும்பம் மிகவும் பணக்காரக் குடும்பமாகும். ஆனால் பிங்ஜாங் பகுதியில் மிகச் சாதாரணமான ஒரு பிளாட்டில் ஜிலாங் குடும்பம் வசித்து வந்தது. பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள மாலா பிரின்ஸ் வணிகப் நிறுவனத்தின் மூளையாக இருந்த அவரது தந்தை, குடும்பத்தின் உண்மையான நிதி நிலையை மறைத்து வைத்திருந்தார். தன் மகனுக்கு இடைவிடாத பணி நெறிமுறையையும் வெற்றிக்கான உந்துதலையும் ஏற்படுத்துவதற்காக இப்படி செய்துள்ளார்.
நான் பள்ளி, கல்லூரி படிப்பை முடிக்கும் வரையில் எங்களுடைய குடும்ப சொத்தைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. குடும்பச் சொத்தையும் மற்றும் பணங்களை சார்ந்திருக்காமல், தகுதியின் அடிப்படையில் என்னுடைய சொந்த பாதையை நான் உருவாக்க வேண்டும் என்பதே எனது தந்தையின் நோக்கமாக இருந்தது என்று ஜிலோங் உள்ளூர் சேனல் ஒன்றில் கூறினார்.