லாபகரமாக பேசி பணத்தை கொள்ளை அடித்த சாமத்திய திருடர்கள்..!! போலீஸ் விசாரணையில் வெளிவந்த பல தகவல்..!!
ராணிப்பேட்டையில் மூதாட்டியை ஏமாற்றி நூதன முறையில் 5 லட்சம் பணம் பறித்த 3 பேர் கைது காவல்துறையினர் விசாரணை..
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஏரந்தாங்கல் பகுதியை சேர்ந்த மாணிக்கம்மாள்(65) என்பவருக்கு ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் பகுதி அருகே 2,1/2 ஏக்கர் நிலம் உள்ளது.காட்பாடி அடுத்த ஏகாம்பரநல்லூர் பகுதியை சேர்ந்த ஜெகநாதன்(56) என்பவர் மாணிக்கம் அம்மாளுக்கு சொந்தமான சிப்காட் பகுதியில் உள்ள இரண்டரை ஏக்கர் நிலத்தை சிப்காட் தொழிற்பேட்டைக்காக ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தினர் கையகப்படுத்தப் போவதாக தெரிவித்து அதற்கு ஒரு கோடியே 13 லட்சம் பணம் வழங்கப்பட இருப்பதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
மேலும் சிப்காட் தொழிற்பேட்டைக்காக நிலம் கையகப்படுத்தக்கூடிய அரசு அதிகாரிகள் தனக்கு தெரியும் எனவும் அவர்களை அணுகினால் காலதாமதம் இன்றி விரைவில் ஒரு கோடியே 13 லட்சம் கிடைத்துவிடும் என தெரிவித்துள்ளார். இதற்காக சிப்காட் தொழிற்பேட்டைக்காக நிலம் கையகப்படுத்தும் வருவாய் அலுவலர் என சுவாதி என்பவர் இருப்பதாகவும் அவருக்கு ஆறு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணம் வழங்கினால் உடனடியாக நிலத்திற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பணம் வழங்க அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு இரண்டு சதவீதம் கமிஷன் தொகையை தர வேண்டும் என ஜெகநாதன் மாணிக்கம்மாள் மற்றும் அவரது மருமகன் வெஸ்லி ஜோசப்பிடம் தெரிவித்ததை தொடர்ந்து கடந்த 20 நாட்களுக்கு முன்பு வெஸ்லி ஜோசப் இடம் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணத்தினை வழங்கி உள்ளார்.
மேலும் இதனை தொடர்ந்து நேற்று ராணிப்பேட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே ஜெயகாந்தன் மற்றும் சுவாதியை வருவாய் ஆய்வாளர் என வெஸ்லி ஜோசப்பிடம் அறிமுகம் செய்து மீதமிருந்த ஐந்து லட்ச ரூபாய் பணத்தினை பெற்றுள்ளனர். இந்த பணத்தினை பெற்றுக்கொண்ட ஜெயகாந்தன் மற்றும் சுவாதி ஆகிய இருவரும் வெஸ்லி ஜோசப்பிடம் இன்னும் சில தினங்களில் உங்கள் இல்லத்திற்கான பணம் வந்துவிடும் எனவும் அதனை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக வந்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துவிட்டு 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து சில மணி நேரத்தில் ஜெயகாந்தன் மற்றும் சுவாதி ஆகிய இருவரும் வெஸ்லி ஜோசப்பிற்கு போன் செய்து 5 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வேப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது இரு சக்கர வாகனத்தில் பின்னால் வந்த இரண்டு நபர்கள் பணத்தை பிடுங்கிக் கொண்டு சென்று விட்டதாகவும் அவர்களை துரத்திச் சென்றபோது ஒரு லட்சத்து ஐயாயிரம் ரூபாய் ரோட்டில் வீசி எறிந்து விட்டு தப்பி சென்றதாக தெரிவித்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து வெஸ்லி ஜோசப் காவல்துறையினருக்கு தகவலை தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆற்காடு நகர காவல் துறையினர் ஜெயகாந்தன் மற்றும் சுவாதி ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஜெயகாந்தன் மற்றும் சுவாதி ஆகிய இருவரும் ஐந்து லட்ச ரூபாய் பணம் வழிப்பறி செய்யப்பட்டதாக தெரிவித்த சம்பவம் நாடகம் என தெரியவந்தது
அதனை தொடர்ந்து மேலும் ஒருவரான பரத் (35)என்பவர் உடன் சேர்த்து மூன்று நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர் மேலும் வெஸ்லி ஜோசப்பிடமிருந்து வாங்கிச் சென்ற 5 லட்சம் ரூபாய் பணமும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்இதனை தொடர்ந்து ஜெயகாந்தன் மற்றும் சுவாதி ஆகிய இருவரையும் நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தி பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். மேலும் சில நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..