எஸ்கேப்பான யுவன்..!! 20 லட்சம் ரூபாய் மோசடி..! பரபரப்பான பணப் பஞ்சாயத்து..!!
இசைஞானி இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா. தந்தையை போலவே இவரும் தமிழ் சினிமாவில் முன்னனி இசையயைப்பாளராக உள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரு சில பாடல்களையும் பாடியுள்ளார். இவரது பாடல்கள் மற்றும் இசைக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது கோட் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
யுவன் மீது புகார்:
யுவன் சங்கர் ராஜா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லேக் பகுதியில் வசித்து வந்தார். இந்த வீடு அஜ்மத் பேகம் என்பவருக்கு சொந்தமானது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அவரது சகோதரர் முகமது ஜாவித், யுவன் மீது திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில்,
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கடந்த 2 வருடங்களாக சென்னை நுங்கம்பாக்கம் லேக் பகுதியில் இருக்கும் தனது சகோதரியின் வீட்டில் வசித்து நிலையில் என்னுடைய சகோதரிக்கு 20 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்துள்ளார். இது குறித்து என்னுடைய சகோதரி கேட்கும் போதெல்லாம் யுவன் அதனை தர மறுத்து வந்தாக கூறியுள்ளார்.
மேலும் தான் வாடகை பணத்தை கேட்டு அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டால் அழைப்பை ஏற்க வில்லை. தற்போது திடீரென வீட்டை காலி செய்ய செய்து முடிவு கடந்த இரண்டு நாட்களாக வீட்டிலிருந்து பொருட்களை எடுத்து செல்வதாக அருகில் உள்ளவர்கள் தெரிவித்தனர்.
இதனால் உடனே இது தொடர்பாக யுவனிடம் விசாரித்து வாடகை பணம் வாடகை மற்றும் சேதத்துக்கான இழப்பீட்டை பெற்று தர வேண்டும்” என்று அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்து யுவன் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-பவானி கார்த்திக்