பாகிஸ்தான் நாட்டில் அகமதியா என்ற ஒரு பிரிவு மக்கள் மைனாரிட்டிகளாக உள்ளனர். இவர்கள் தங்களை முஸ்லிம்களாகவே கருதிக் கொள்கின்றனர். எனினும், பாகிஸ்தானில் இவர்கள் இஸ்லாமிய முறைப்படி தொழுகையில் ஈடுபட தடை உள்ளது. ஏனென்றால் , இஸ்லாமில் முகமது நபிகள் மட்டுமே இறை தூதராக கருதப்படுபவர். ஆனால், 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த பஞ்சாப் மாகாணத்தைச் சேகர்ந்த மிர்சா குலாம் அகமது (1835-1908) என்பர்த இந்த இயக்கத்தின் தோற்றுவித்தாடு, முகமது நபிக்குப் பிறகு வந்த இறைத்தூதராகத் தன்னை அறிவித்துக் கொண்டார்.
இவர்களது வழிபாடு முறை அனைத்து வகையிலும் இஸ்லாம் மதத்தை போலவே இருக்கும். ஆனால், மிர்சா குலாம் அகமதுவை இறை தூதராக ஏற்றுக் கொண்டதால், அகமதியர்களை பாகிஸ்தானில் மைனாரிட்டிகளாக கருதப்படுகின்றனர். உலகம் முழுக்க 1 கோடி அகமதியர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. லண்டனில் அகமதியர்களுக்கு பிரமாண்டமான மசூதியும் உள்ளது. பல நாடுகளில் அகமதியர்கள் வசிக்கின்றனர்.
பாகிஸ்தானில் அதிகளவில் வசித்து கொண்டிருக்கின்றனர். மேலும், பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் அகமதியர்களை குறி வைத்து தாக்குவதும் வழக்கமானது. பாகிஸ்தானில் 2024ல் மட்டும் ஆறு அகமதியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் 1984 ஆண்டு முதல் இப்போது வரை 280க்கும் மேற்பட்ட அகமதியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 18) கராச்சி அருகிலுள்ள சட்டார் என்ற இடத்திலுள்ள அகமதியர்களின் மசூதிக்கு அருகே 600க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கூடினர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அகமதி மக்கள் தொழுகையில் ஈடுபடும் போதுதான், இஸ்லாமிய மக்கள் தாக்குதலில் ஈடுபடுவார்கள். அந்த வகையில், நேற்று தொழுகைக்கு சென்ற ஒருவரை பிடித்து சராமரியாக தாக்கினர். அவர்களின் வழிபாட்டு தலத்தையும் சேதப்படுத்தினர். தாக்குதலுக்குள்ளானவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனில்லாமல் இறந்து போனார்.
இதையடுத்து, அகமதி இனத்தை சேர்ந்த 25 பேரை பாகிஸ்தான் போலீசார் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்று வைத்துள்ளனர் அமதியர்கள் இஸ்லாமிய முறைப்படி தொழுகை நடத்துவதை கண்காணித்து Tehreek-e-Labbaik என்ன தன்னார்வ அமைப்பு போலீசாருக்கு தகவலும் அளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.