சிக்கன் போண்டா எப்படி வீட்டில் செய்வது..!
நீங்கள் எவ்வளவே ஸ்நாக் செய்து வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து இருப்பீங்க ஆனால் இப்படி ஒரு சிக்கனை வைத்து போண்டா செய்து பார்த்து இருக்கீங்களா? இன்னிக்கு இதோ நான் சொல்ற மாதிரி போண்டா செய்து பாருங்க, அப்பறம் பாருங்க உங்களுக்கு வரும் பாராட்டு மழைய..
தேவையான பொருட்கள்:
- 200 கிராம் எலும்பில்லாத சிக்கன்
- ஒரு பெரிய உருளைக்கிழங்கு
- மஞ்சள் தூள்
- அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- உப்பு
- ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- எண்ணெய்
- ஒரு பெரிய வெங்காயம்
- இரண்டு பச்சை மிளகாய்
- அரை டீஸ்பூன் மல்லித்தூள்
- கருவேப்பிலை
- அரை டீஸ்பூன் சீரகத்தூள்
- அரை டீஸ்பூன் கரம் மசாலா
- ஒன்றை கப் கடலை மாவு
- உப்பு
- ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
- ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- எண்ணெய்
- செய்து வைத்த மசாலா
- கரைத்து வைத்த மாவு
- சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் சிக்கன், நறுக்கிய உருளைக்கிழங்கு, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறிவிட்டு குக்கரை மூடி ஐந்து விசில் வரும் வரை விட்டு இறக்க வேண்டும்.
- பின் குக்கரை திறந்து அதில் வேகவைத்ததை மட்டும் தனியே எடுத்து சிக்கனை பிச்சு போட்டு வைக்க வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் வேகவைத்த சிக்கன் துண்டுகளை சேர்த்து கிளறிவிடவும்.
- அடுத்ததாக மல்லித்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் ஆகியவற்றை சேர்த்து கிளறி விட வேண்டும்.
- வேகவைத்த சிக்கன் தண்ணீரை சிறிது சேர்த்து கிளறிவிட்டு தண்ணீர் வற்றும் வரை வேகவைத்து கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசிமாவு, உப்பு, மிளகாய்த்தூள் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தயாரித்து வைத்த கலவையை உருண்டைகளாக பிடித்து மாவில் டிப் செய்து எண்ணெயில் போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
- அவ்வளவுதான் சுவையான சிக்கன் பகோடா தயார். சூடாக சாப்பிட்டு மகிழுங்கள்.