காலாவதியான பொருட்களை வீசியதால் பரபரப்பு…
திருப்பத்தூர் அருகே காலாவதி பொருட்களை கொட்டிச் சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது .
திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள தர்மபுரி மேம்பாலத்தின் அடியில் மர்ம நபர்கள் காலாவதியான மளிகை பொருட்களை கொட்டி சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அதனை அறிந்த அப்பகுதி மக்கள் அதனை அள்ளிச் செல்ல ஆர்வம் காட்டினர்.
அப்போது அந்த மளிகை பொருட்கள் காலாவதியானதை அறிந்து திரும்பவும் அங்கேயே வீசி சென்றனர்.
இந்த குப்பையில் குழந்தைகள் சாப்பிடும் பிஸ்கட்டுகள், குர்குரே, பேஸ்ட் குளிர்பானங்கள், மற்றும் பல மளிகை பொருட்களை மர்ம நபர்கள் குப்பையில் வீசி சென்றுள்ளனர்.
மேலும் குப்பையில் வீசபட்டுள்ள உணவுப் பொருட்களை சிறு குழந்தைகள் எடுத்து சாப்பிடவும் வாய்ப்பு உள்ளது எனவே இதனை உடனடியாக அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டும்.
மேலும் குப்பையில் கொட்டிச் சென்ற மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.