ADVERTISEMENT
பெட்ரோல் குண்டு வீசியதால் வாணியம்பாடியில் பரபரப்பு…
வாணியம்பாடியில் சூப்பர் மார்க்கெட் கடை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய நபரை வாணியம்பாடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதி சேர்ந்தவர் சவுகத் அலி இவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார்.
அப்பகுதியில் இரண்டு பேர் கடை முன்பு அமர்ந்து மதுபானம் அருந்தி கொண்டிருந்ததால் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் மது அருந்த கூடாது என கண்டித்துள்ளார்.
ஆத்திரமடைந்த இருவர் மது பாட்டில் பெட்ரோல் நிரப்பி கடை மீது வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதைக் குறித்து சவுகத் அலி வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.