டெல்லிக்கு குடியரசு தின அணிவகுப்பு செல்லும் மாணவர்கள் இனி ரயிலில் பயணம் செய்யாமல் வரக்கூடிய காலங்களில் இலவசமாக விமானத்தில் பயணிக்கலாம் என விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் மாநில இளைஞர் திருவிழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் விளையாட்டுத்துறை செயலாளர் அத்துல்யா மிஸ்ரா மற்றும் சென்னை மண்டலத்திற்குட்பட்ட நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 1000க்கும் மேற்பட்டோர இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்பொழுது மேடையில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடைப்பேச்சு.
தமிழ்நாடு நாடு நலப்பணி சார்பாக முதல் முறையாக இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் உலகிலேயே அதிக இளைஞர்கள் கொண்ட நாடு இந்தியாவும் ஒன்று அதிலும் குறிப்பாக 10 மாநிலங்கள் இளைஞர்களை அதிகம் உள்ளனர் அந்த மாநிலத்தில் தமிழ் நாடு இருக்கிறது,
ஒவ்வொரு துறையை சேர்ந்தவர்களுக்கும் ஒவ்வொரு பொறுப்பு இருக்கும், ஆனால் இந்த என்.எஸ்.எஸ் மாணவர்களுக்கு எல்லாவற்றிற்கும் விதிவிலக்கு, நாட்டில் எந்த பேரிடர் நடந்தாலும் அங்கு நீங்கள் தான் முதலில் இருப்பீர்கள், களத்தில் நீங்கள் செய்த சேவை மிக முக்கியமாக உள்ளது,
கண் தானம், ரத்த தானம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது ஒட்டுமொத்த தமிழகமே கவனித்துக் கொண்டிருக்கிறது, போதைப் பொருளுக்கு எதிரான மிகப்பெரிய விழிப்புணர்வை நீங்கள் மேற்கொண்டு வருகிறீர்கள், இப்படி பல சமூகப் பணியை நீங்கள் செய்து வருகிறீர்கள்,
ஒரு விளையாட்டு துறை அமைச்சராக நான் கேட்டுக் கொள்வது கல்வி ஒன்று தான் அழிக்க முடியாத சொத்து, நீங்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் உங்களுக்கு பிடித்த விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்,
தகவல் தொழில் நுட்பமும் அறிவிலும் வழந்து கொண்டு வருகிறது, எனது இன்னொரு கோரிக்கை சமூகவலைத்தளத்தில் தலையீட்டில் நீங்கள் அனைவரும் பயன்படுத்துகிறீர்கள் என்று நம்புகிறேன், ஒரே விஷயத்தை நீங்கள் பார்த்தால் அதை பகுத்தறிவு கொண்டு உண்மை தானா என்று யோசிக்க வேண்டும் இதுதான் தந்தை பெரியார் அவர்கள் நமக்கு கூறியிருக்கிறார், அதை நீங்கள் கடைபிடிக்க வேண்டும்,
எந்த ஒரு செய்தியும் பகிர்வதற்கு முன்பு உண்மையா என்ன என்பதை அறிந்து நீங்கள் அதைத் தவிரக்க வேண்டும், பொய்யான வதந்தி உள்ள செய்திகள் தான் இன்றைக்கு பல பிரச்சனைகளை உருவாக்குகிறது,
நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் வருடம்தோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்திற்காக டெல்லி செல்வது வழக்கம் அவர்கள் அனைவரும் இதுவரை ரயிலில் தான் சென்றுள்ளனர்
நீண்ட நாட்களாக என்னிடம் வைக்கப்பட்ட கோரிக்கை நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் டெல்லிக்கு விமான மூலமாக செல்வதற்கு உதவ வேண்டும் என அதற்கு வருகிற குடியரசு தினத்தன்று விமான நிலையமாக பயணிக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
இளைஞர்கள் அவர்களது திறமையை வளர்த்துக் கொள்வது அவர்களுக்கு மட்டுமில்லாமல் இந்த நாட்டிற்கும் முக்கியத்துவம் வாய்ந்தது, என தெரிவித்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியார் சந்திப்பு.
சாரணியர் இயக்கம், என்சிசி மற்றும் நாட்டு நலப்பணி திட்டத்தில் இருக்கும் மாணவர்களை குடியரசு தினம் மற்றும் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகைக்காக அழைத்துச் செல்லக்கூடிய மாணவர்கள் இதுவரை ரயிலில் சென்றனர் தற்பொழுது விமானத்தில் அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வோம் என கூறியிருந்தோம் அதற்கேற்ப வருகிற குடியரசு தினத்தில் தமிழ்நாட்டில் இருந்து டெல்லி செல்லக்கூடிய மாணவர்கள் விமானத்தில் இலவசமாக பயணிப்பார்கள். இது வரக்கூடிய காலங்களில் பின்பற்ற நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்
நீட் தேர்வுக்கு எதிரான உங்கள் போராட்டத்தை நாடகம் என ஈபிஎஸ் விமர்சித்துள்ளாரே என்ற கேள்விக்கு?
நாடகமாகவே இருக்கட்டும். அந்த நாடகத்திலாவது நீங்களும் வந்து பங்கேற்றுக் கொள்ளுங்கள் என்று அழைத்தேன். நீட் தேர்வு ரத்தானால் அதன் முழு Credit ஐ யும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன். இப்போதும் கூறுகிறேன். 21 மாணவர்களை இழந்தது போதாதென்று இப்போது பெற்றோரையும் இழக்கத் தொடங்கிவிட்டோம். நீட் ரத்து அதிமுகவின் கொள்கையும் தானே? நான் அழைத்ததற்கு எடப்பாடி என்ன பதில் சொல்கிறார் என்று கேட்டீர்களா? நான் மட்டும் தான் உங்களுக்கு கிடைக்கிறேன். என்னிடம் மட்டும் மீண்டும் மீண்டும் கேட்கிறீர்கள் அவரிடம் கேளுங்கள்.
Discussion about this post