தனியார் பள்ளி வேனில் சிக்கி 3 வயது ஆண் குழந்தை பலியான சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் . இவருக்கு 3 வயது. இந்நிலையில் தனது அக்காவை பள்ளி வேனில் ஏற்ற தனது அம்மாவுடன் சென்றுள்ளார்.
அப்போது அக்கா வேனில் ஏறியதும், வேன் சக்கரத்தில் எதிர்பாரதவிதமாக சிக்கியுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து குழந்தையை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விக்கிரவாண்டி காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மூன்று வயது குழந்தை பள்ளி வேனில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.