சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரும் முதலாண்டு ஆண்டு மாணவர்களின் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாவில் பேசும் போது தமிழ்நாட்டின் கல்வி நன்றாக உள்ளது எனவே பலமுறை ஆளுநர் பேசியுள்ளார்.
ஆகையால் தவறாக கூறிவரும் ஆளுநரை நாங்கள் குறிப்பிட்டுள்ளவற்றில் ஏதேனும் தவறு இருந்தால் நிரூபித்து காட்ட சொல்லுங்கள் என்றார்,
மாநில அரசு என்ன சொல்கிறதோ அதன் அடிப்படையில் செயல்படுத்துவது ஆளுநரின் வேலை திராவிடம் என்பது தமிழகத்தில் மட்டுமல்ல உலகத்திற்கே ஏற்ற ஒரு கொள்கையாகும், திராவிடம் வந்த பிறகு தான் சனாதனம் என்று ஒன்று காலாவதியானது. ஆகையால் காலாவதி ஆக வேண்டியது ஆளுநர் பதவி மட்டுமே என்றார்