மத்திய பிரதேச மாநிலத்தில் நிலத் தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் நிலத் தகராறில் துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.உயிரிழந்தவர்களில் மூன்று பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் ஆவர்.
பலத்த காயங்களுக்கு உள்ளான மேலும் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் லெபா கிராமத்தில் இன்று காலை நிகழ்ந்துள்ளது.தகவின்படி , சில தகராறில் ரஞ்சித் தோமர் என்பவர் ஆதரவாளர்களுடன் தன் எதிரியான ராதே தோமரின் குடும்பத்தின் மீது தடிகளால் தாக்கியதாகவும் ஒரு கட்டத்தில் ராதே தோமரின் குடும்பத்தாரை துப்பாக்கியால் சுடத்தொடங்கினர் என்று கூறப்படுகிறது
இதில் ராதே தோமரின் குடும்பத்தில் தந்தை மகன் ,3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.தகவல் கிடைத்து சம்பவஇடத்திக்கு வந்த காவல்துறை விசாரணை நடந்து வருகின்றனர் தகவல் மற்றும் கிராமத்தில் ஏராளமான காவல்துறை குவிக்கப்பட்டுள்ளனர்
கடந்த 2013-ம் ஆண்டு தரிசு நிலத்தில் கழிவுகளை கொட்டுவது தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ராதே தோமரின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இதேபோன்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர் என்று கிராம மக்கள் கூறுகின்றனர்