அமைச்சா் பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கு..!! சென்னை உயா்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சா் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2002-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சா் பொன்முடிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
2006 முதல் 2011 ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து அவரது சொத்துகளையும் முடக்கியது. அதையடுத்து 2016 ஆம் ஆண்டு இது தொடர்பான வழக்கில் இருந்து பொன்முடியை விடுதலை செய்த விழுப்புரம் நீதிமன்றம், அவரது சொத்துகள் முடக்கத்தையும் நீக்கியது.
அதனை எதிர்த்து கடந்த டிசம்பர் 22ம் தேதி 2023ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த, உயர் நீதிமன்ற நீதிபதி உத்தவிட்டார்..
இதையடுத்து, சொத்துகளை முடக்கக்கோரிய மனு மீது இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன், சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சொத்துக்களை தற்போதைய சூழலில் மீண்டும் முடக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தேவைப்பட்டால் சட்டத்திற்கு உட்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்” என தீர்ப்பளித்துள்ளது.
இந்த நிலையில், விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, வேலூருக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த வேலூா் நீதிமன்றம், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து தீா்ப்பளித்தது.
இதற்கு எதிராக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொன்முடிக்கு எதிரான வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..