“மனித வளத்தை பாதிக்கும் மது..” இது தேசவிரோதமான செயல்..!! திருமாவளவன் பேச்சு..!!
விசிக தலைமையில் நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் மனித வளத்தை பாதிக்க கூடிய மது விற்பனையை அரசே செய்வது தேசத்திற்கு விரோதமான செயல் பேசியுள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது அக்டோபர் 2 ம் தேதி விசிகவின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 69 பேர் பலியானார்கள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து போத மக்கள் வைத்த கோரிக்கை மதுபான கடைகளை அரசு மூட வேண்டும், சாராய கடைகளை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.ஆகவே தான் மதுவிலக்கு கோரி மாநாட்டை விசிக நடத்துகிறது என்றார்.
மேலும் திமுகவிற்கும், அதிமுகவிற்கு இடசாரி கட்சிக்கும், விசிகவிற்கும் மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு உண்டு என்றாலும் ஆட்சியில் உள்ள அரசுக்கு மதுவிலக்கை அமல்படுத்துவதில் என்ன தயக்கம் என்று தெரியவில்லை ராணுவத்தில் இருந்தால் மது அருந்தலாம், கேண்டீனில் மது வாங்கலாம் என்று இருக்கும் நிலை மாற வேண்டும்.
மதுவிலக்கை தேசிய கொள்கையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.மதுவிலக்கை அமல்படுத்த முன் வரும் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பை ஈடு செய்ய சிறப்பு நிதி வழங்க வேண்டும். மனித வளத்தை பாதிக்க கூடிய மது விற்பனையை அரசே செய்வது தேசத்திற்கு விரோதமான செயல் என்றார்.
தொடர்ந்து பேசிய திருமாவளவன் தேர்தல் அறிக்கையில் கூறிய மதுவிலக்கு கொள்கை திட்டத்தை திமுக அரசு உயிர்பிக்க வேண்டும்.மதுவை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.மதுவுக்கு மாற்றாக கள்ளு கடை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வலுக்கிறதே என்ற கேள்விக்கு கள்ளு கடை உள்ளிட்ட எந்த போதை பொருளும் கூடாது என்பது தான் விசிக நிலைப்பாடு..
விசிக-வின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவும் வரலாம் எல்லாம் கட்சிகளும் வரலாம் இந்த நிலைப்பாடை தேர்தல் அரசியலோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது எனவும் மாநாடு நடத்தும் விஜய்-க்கு வாழ்த்துகள் எனவும் கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..