பாஜக அண்ணாமலை நேரடியாக விவாதிக்க தயரா ? என அமைச்சர் பொன்முடி சவால் விட்டுள்ளார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி பாடத்திட்டம் நிறுத்தப்பட்டது தொடர்பாக விவாதிக்க நான் தயாரக உள்ளேன், அண்ணாமலை தயாராக உள்ளாரா? என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் விவாதிக்கலம் என்றவர், ஜீன் 5 ஆம் தேதி ஊட்டியில் துணை வேந்தர்கள் கூட்டம் நடைப்பெறும் என்று அறிவித்துள்ளார். ஆனால் இந்த தகவல் எனக்கு தெரியாது, அரசுக்கே தெரியாமல் நடத்துகிறார், நான் இணை வேந்தர் எனக்கு தகவல் கொடுக்கவில்லை வேந்தர் தன்னிச்சையாக எடுத்த முடிவு. அண்ணாமலைக்கிட்ட கவர்னர் சொல்லி இருப்பார். குறைந்தபட்சம் அவரிடமாவது கேட்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, மும்மொழி கொள்கையின் அவசியம் குறித்து விவாதிக்க நான் தயார், நீங்கள் தயாரா? என அமைச்சர் பொன்முடிக்கு சவால் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.