மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டியில், திடீர் தீ விபத்து. இந்த கொடூர தீவிபத்தில் உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 10 பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளனர். 6க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
“ரயிலில் பயணித்த 64 பேரில் 39 பேர் நலமுடன் உள்ளனர்,39 பேருக்கு உரிய நிவாரணம் வழங்கி ரயில் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளர்கள்,6 பேர் மதுரை ரயில்வே மருத்துவமனையிலும், 2 பேர் வெளிப்புற காயங்கள் ஏதும் இல்லாமல் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,தமிழ்நாடு அரசின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி வழங்கப்படும்,5 மருத்துவ குழுக்கள் தயாராக உள்ளது, விரைவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டும்” என்றார்.
Discussion about this post