‘ஹர்காரா’ படத்தில் இந்த வாசகம் இருக்க வேண்டும்.. படக்குழுவிற்கு ஐகோர்ட் உத்தரவு..!!
இயக்குனர் ராம் அருண் காஸ்ட்ரோ தயாரிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் “ஹர்கார”. இந்த திரைப்படத்தில் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.
இயக்குனர் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் இப்படத்தில் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகியாக கவுதமி நடித்துள்ளார். பிச்சைக்காரன் ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நேற்று உலகமெங்கும் வெளியான இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் வெளியிட்டது.
“ஓட்டத் தூதுவன்” 1854ம் ஆண்டு வெளியான இந்த படத்தை வைத்து தான், “ஹர்காரா” என்ற படம் வெளியாகி இருப்பதாக சிதம்பரம் என்பவர் வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கதை, திரைக்கதையில் சிதம்பரம் என்ற பெயர் இடம்பெற வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
தற்போது ‘ஹர்காரா’ பட விவகாரத்தில் அசல் கதை குறித்த வசனங்கள் இடம் பெற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றமும் படக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..