சிகரம் தொட்ட ஜெயிலர்..!! 14 நாட்களில் இவ்வளவு வசூலா..?
தமிழ் திரையுலக வரலாற்றிலேயே ஜெயிலர் படம் 14 நாட்களில் 525 கோடியை வசூல் செய்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் டைகர் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஜெயிலர் படம் உலக அளவில் வசூலை வாரி குவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், அக்ஷயகுமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா மற்றும் பலரின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியான திரைப்படம் தான் “ஜெயிலர்” 800கோடி வசூலை தக்க வைத்துள்ளது.
விக்ரம் படம் 414 கோடி, பொன்னியின் செல்வன் பாகம்-1 450 கோடி, பொன்னியின் செல்வன் பாகம்-2 345 கோடி மற்றும் விக்ரம் 414 கோடி வசூல் அள்ளிய நிலையில்.., தமிழ் திரை உலகில் முதல் முறையாக 525 கோடியை வசூல் செய்த முதல் திரைப்படம் “ஜெயிலர்”. இந்த வெற்றி அனைத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினியை மட்டுமே சேரும் என திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
Discussion about this post