அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம்..!! வெளியுறவு அமைச்சகம் அறிக்கை..!!
மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 6 நாள் அரசு பயணமாக ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..
இதுகுறித்து., வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது..
மத்திய வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கர் நவம்பர் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை 6நாள் அரசு பயணமாக வெளிநாட்டிற்கு செல்லவுள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலியாவிற்கு சென்று . அங்கு பிரிஸ்பேன் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்திய தூதரகத்தை திறந்து வைக்கிறார்.
அதனை தொடர்ந்து கான்பெரா நகரில் ஆஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் பென்னி வாங்குடன் இணைந்து, 15-வது வெளியுறவு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்..
அதன் பின்னர் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர், தொழில்துறையினர், மற்றும் அந்நாட்டு அமைச்சர்களை சந்தித்து கலந்துரையாட இருக்கிறார்..
அதனை தொடர்ந்து நவம்பர் 8ம் தேதி சிங்கப்பூர் சென்று அங்கு நடைபெறவுள்ள 8வது ஆசியான் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
அந்நாட்டின் அரசியல் தலைவர்களை சந்தித்து, இந்தியா- சிங்கப்பூர் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த போவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..