அமைச்சர் துரைமுருகன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!!
அமைச்சர் துரைமுருகன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு மற்றும் கல்லூரியில் சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேப்போல் திமுக எம்.பி. கதிர் ஆனந்த் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 2019ம் ஆண்டு தேர்தலின் போது வேலூரில் திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடத்தில் இருந்து 11 கோடி பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக முன்னாள் நகரச் செயலாளரும் வேலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு துறை அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன் பள்ளிக்குப்பம் அடுத்த கீழ் மோட்டாரில் உள்ள வீட்டில் அமலாகத்துறை சோதனை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..