உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்…!!
மயிலாடுதுறை மாவட்டம் :
வீரமங்கை வேலுநாச்சியாரின் 295-வது பிறந்தநாளையொட்டி மயிலாடுதுறையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் குட்டிகோபி தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.
தருமபுரி மாவட்டம் :
தருமபுரி மாவட்டம் அதகப்பாடி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மூளைச்சாவு அடைந்ததால் அவரது உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானமாக கொடுத்துள்ளனர். இதனை அடுத்து முருகேசனின் உடலுக்கு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.
அரியலூர் மாவட்டம் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த தினேஷ்குமார் மற்றும் கலியபெருமாள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மீன்சுருட்டி அருகே எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தினேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் :
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமபுரம் ஊராட்சியை திருத்தணி நகராட்சியுடன் இணைபதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் :
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே ஆட்டோ ஓட்டுநர்கள் அளவுக்கு அதிகமாக பொதுமக்களை அழைத்துச் செல்வதாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவிடம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை அடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தலைமையிலான வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் விதியை மீறி செயல்பட்ட ஆட்டோக்களை பறிமுதல் செய்து எச்சரிக்கை விடுத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் :
திருவள்ளூரில் சாலைகளில் ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அறிவித்தும் வியாபாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாததால், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் தஷ்ணவிஸ் பெர்னாண்டோ தலைமையில் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
அரியலூர் மாவட்டம் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் உட்கோட்டை காலனி தெருவை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவருக்கும் அதே தெருவை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பாஸ்கர் தான் மறைத்து வைத்திருந்த அறிவாளால் பரமேஸ்வரனின் கையை வெட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஜெயங்கொண்டம் காவல்துறையினர் பாஸ்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..