விமானத்தின் ஜன்னல் ஏன் வட்டமா இருக்குனு உங்களுக்கு தெரியுமா..?
விமானத்தின் ஜன்னல் வட்டமாக இருக்க காரணம்.., விமானம் வானில் பறக்கும் போது அதிகமான காற்று அழுத்தம் போன்ற பிரச்சனைகள் வர கூடும். அதனால் விமானத்தின் வெளியில் உள்ள அழுத்தம் குறைவாகவும் விமானத்தின் உள்ள இருக்கும் அழுத்தம் அதிகாமாகவும் இருக்கும்.
இப்படி இருக்கும் பட்சத்தில் விமானத்தின் ஜன்னல் வட்டமாக இருப்பதால் அந்த விமானத்தின் உள் ஏற்பட்ட அழுத்தமானது அனைத்து இடங்களிலும் பரவி விடும் . இதனால் விமானத்தின் உள் பயணிக்கும் பயணாளிகளுக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாது.
ஒரு வேளை அந்த ஜன்னலானது வட்டமாக இருக்காமல் சதுரமாகவோ அல்லது முக்கோணம் போன்று வேறு எந்த வடிவில் இருந்தாலும். அந்த அதிகமான உயர் அழுத்தமானது மற்ற இடங்களில் பரவாமல் ஜன்னலின் மூளை இடுக்குகளில் தங்கி விடும். இதனால் ஜன்னல் கண்ணாடியே உடையக்கூடிய வாய்புண்டு.
இதுவே விமானத்தின் கண்ணாடியானது வட்டமாக உள்ள தன் ரகசியம் .
-ரோகிணி
Discussion about this post