அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. உடன் கட்சியின் நிர்வாகிகள் மல்லை.சத்யா மற்றும் துரை வைகோ உள்ளிட்டோர் இருந்தனர்.
சட்டமேதை என்று அழைக்கப்படும் அண்ணல் அம்பேத்கரின் 133-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அம்பேர்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், அதிமுக, விசிக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, காங்கிரஸ், மநீம, விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட கட்சியினரும் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ, மல்லை சத்யா உள்ளிட்டடோர் பங்கேற்றனர்.