கிஷான் கிரெடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு…!! 5 லட்சமாக உயர்வு..!! அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!
கிஷான் கிரெடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்குதலில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2025-2026ம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை மக்களவையில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது தெலுங்கு கவிதைகளை சுட்டிக்காட்டி பேசியதால் சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். அதனை தொடர்ந்து பட்ஜெட் உரையாற்றினார்.
அதில், நமது நாட்டின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்துள்ளதாகவும், இந்தியா மீதான நம்பகத்தன்மை உலக அளவில் உயர்ந்துள்ளதாகவும் எல்லா பகுதிகளிலும் சமச்சீரான அளவில் வளர்ச்சி உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும் இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், வேளாண் வளர்ச்சி, இளைஞர் நலன், சிறுகுறு தொழில், ஏற்றுமதியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
மேலும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு 10 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், கிஷான் கிரெடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு 3 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேபோல் பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு, 2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் துவங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.