12 லட்சம் வரை வருமான வரி கிடையாது…!! ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்று வருகிறது. ஆண்டின் முதல் தொடர் என்பதால் நேற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அதனை தொடர்ந்து 2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் இன்று தொடங்கியது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கினார்.
அப்போது மகாகும்பமேளா உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதோடு வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில் வெளிநடப்பு செய்த எதிர்கட்சியினர் தங்களது கண்டனத்தை பதிவு செய்த பின் மீண்டும் அவை நடவடிக்கையில் கலந்துகொண்டனர். எதிர்க்கட்சிகள் கடும் அமளிக்கு இடையே நிதியமைச்சர் பட்ஜெட்டை வசித்தார்.
2025-2026ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில் புதிய வருமான வரி திட்டத்தில் 12 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்றும் மாதம் 1 லட்சம் வரை ஊதியம் வாங்குவோர் இனி வரி கட்டத் தேவையில்லை என்றும் தனிநபர் வருமான வரிக்கான உச்சவரம்பு 7 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக அதிகரிப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் வீட்டு வாடகை TDS உச்ச வரம்பு ரூ.2.40 லட்சத்தில் இருந்து 6 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் வருமான வரி செலுத்துவதை எளிமையாக்கும் வகையிலும் புதிய மசோதா இருக்கும் என அறிவித்துள்ளார். அதேபோல் 36 உயிர் காக்கும் புற்றுநோய் மருத்துகளுக்கு வரி விலக்கு அளித்தும், 82 மருத்துகளுக்கு செஸ் அல்லது மதிப்பு கூட்டு வரிகளில் ஏதெனினும் ஒன்றுக்கு மட்டும் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..