சுருள் முடியை எப்படி பராமரிப்பது..!!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
சுருள் முடியை பராமரிக்க பயன்படும் பொருட்கள்:
- உந்தலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் இயற்கையான ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
- உந்தலை கண்டிஷனிங் செய்வதற்கு இயற்கையான முறையில் முட்டை மற்றும் தயிர் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
- தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்க மார்கெட்டுகளில் ரசாயனங்கள் கலக்காத ஷாம்புக்களை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
- கூந்தலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் சல்பேட் கலக்காத பொருட்களை வாங்கி பயன்படுத்துவது முக்கியம், காரணம் சல்பேட் தலைமுடியை அதிகம் பாதிக்கிறது.
- இயற்கையான முறையில் மற்றும் ரசாயனம் கலக்காத பொருட்கள் முடியின் வறட்சியை தடுத்து ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.
- தலைமுடியில் வறட்சி ஏற்படாமல் பாதுகாக்க வாரத்திற்கு இருமுறையேனும் கண்டிஷனிங் பயன்படுத்த வேண்டும்.
- உங்களுடைய சுருள்முடிக்கு ஏற்றவாறு சீரம் வாங்கி பயன்படுத்த வேண்டும்.
- ஏதேனும் ஒரு நேரத்தில் தலைமுடிக்கான மருத்துவரை அணுகுகிறீர்கள் என்றால் இயற்கையான முறையில் சிகிச்சையை மேற்க்கொள்ள வேண்டும்.
சுருள் முடி வளர்ச்சிக்கு பயன்படும் எண்ணெய்கள்:
- சுருள் முடி உடையவர்கள் தாராளமாக நாம் தினமும் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயை முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெயில் இருக்கும் சத்துக்கள் முடிக்கு ஊட்டத்தையும் ஈரப்பதத்தையும் தருகிறது.
- தற்போதைய காலக்கட்டத்தில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க சந்தைகளில் ஆலிவ் ஆயில், ரோஸ்மேரி ஆயில், ஆர்கன் ஆயில் என பலவகை உண்டு. இவற்றை தினசரி பயன்படுத்த முடியின் வளர்ச்சியை மேம்படுத்தலாம்.
ADVERTISEMENT
- விளக்கெண்ணெயில் முடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடிய பலவித சத்துக்கள் நிறைந்துள்ளதால் இந்த ஆயிலை வாரத்தில் இருமுறை தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.
- தலைக்கு குளிக்கும் முன் நல்லெண்ணெயில் மசாஜ் செய்து குளிப்பதினால் உஷ்ணமானது குறைகிறது.
- வீட்டிலேயே மருதாணி, கறிவேப்பிலை, கருஞ்சீரகம், கரிசலாங்கண்ணி, வெங்காயம், வெந்தயம், நெல்லிக்காய் ஆகிய மூலிகைகளை பயன்படுத்தி எண்ணெய் காய்ச்சி அதனை தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.