பஹால்காம் தாக்குதலையடுத்து, இந்தியா பாகிஸ்தானில் போர் விமானங்களை கொண்டு தாக்குதல் நடத்தியது. பஹவால்பூரிலுள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைமையகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் அந்த அமைப்பின் தலைவர் முகமது ஹபீஸின் நெருங்கிய உறவினர்கள் 10 பேர் உதவியாளர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ஹபீஸ் முகமது அறிக்கை வெளியிட்டு உறுதி செய்திருந்தார்.
அப்போது, நானும் அவர்களுடன் சேர்ந்த போயிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், தீவிரவாத தலைவன் மசூத் அசாருக்கு ஒரு உயிருக்கு ஒரு கோடி என 14 கோடியை பாகிஸ்தான் அரசு நிதியுதவியாக அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.