முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 10 முதல் 12 ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த மாநாட்டில் அமைச்சர்கள், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.
தமிழ்நாடு அரசின் திட்டங்களை அறிந்துக்கொள்ளவும், அவற்றை சிறப்பாக செயல்படுத்தவும் முதலமைச்சர் தலைமையில் மாநாடு நடைபெற உள்ளது.
3 நாள் நடைபெறும் மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்ட – ஒழுங்கு, வளர்ச்சி பணிகள் குறித்தும், வரும் ஆண்டுகளில் மக்களின் தேவைகளை ஆட்சியர்கள் மூலம் அறிந்து திட்டங்களை கொண்டுவர ஆலோசனை நடைபெற உள்ளது.