பாஜக கட்சி ரீதியிலான 8 மாவட்டங்களின் தலைவர்கள் நீக்கம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
சென்னை உட்பட 7 மாவட்டங்களில் பாஜக அணி பிரிவுகள் அனைத்தும் கலைக்கப்படுகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி மாவட்டங்களில் கீழ்கண்ட மாவட்டங்களை சீரமைக்கும் பொருட்டு திருநெல்வேலி, நாகை, சென்னை மேற்கு, வட சென்னை மேற்கு, கோயம்புத்தூர் நகர், புதுக்கோட்டை, ஈரோடு வடக்கு, திருவண்ணாமலை வடக்கு உள்ளிட்ட மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், அணிகள், பிரிவுகள் மற்றும் மண்டல கமிட்டிகள் அனைத்தும் முழுமையாக கலைக்கப்படுகிறது.
புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படும் வரை, தற்காலிகமாக கீழ்கண்ட நிர்வாகிகள் மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிகப்படுகிறார்கள்.
புதிய மாவட்ட பொறுப்பாளர்கள்:-
திருநெல்வேலி – ஜோதி
நாகை – வரதராஜன்
சென்னை மேற்கு – மனோகரன்
வட சென்னை மேற்கு – பாலாஜி
கோயம்புத்தூர் நகர் – முருகானந்தம்
புதுக்கோட்டை – செல்வ அழகப்பன்
ஈரோடு வடக்கு – செந்தில்குமார்
திருவண்ணாமலை வடக்கு – ஏழுமலை
என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.