மாவோயிஸ்டுகள் முழுவதுமாக அழிக்கப்படுவார்கள் – அமித் ஷா..!
அரசின் செயல்பாடுகளுக்கு அதிக அளவில் எதிராக நிற்பவர்கள் தான் மாவோயிஸ்டுகள். ஆயுத போராட்டம் நடத்தி, தங்களது அரசியல் அதிகாரத்தை பெற முயற்சிக்கும் இவர்கள், ஒரு காலக்கட்டத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், தங்களது ஆயுத போராட்டத்தை நடத்தி வந்தனர்.
ஆனால், தற்போது, ஒடிஷா, சத்தீஸ்கர், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில், சொற்ப எண்ணிக்கையில் மட்டும் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிஷா, ம.பி., ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் தலைமை செயலாளர்களுடன், ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா, 2026-ம் ஆண்டுக்குள், இந்தியாவில் மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை முற்றிலுமாக அழிக்கப்படும். எனவே, வன்முறையை கைவிட்டுவிட்டு, மாவோயிஸ்டுகள் சரணடைய வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், கடந்த 10 ஆண்டுகளில், மாவோயிஸ்டுகளின் தாக்குதல், 50 சதவீதமாக குறைந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
-பவானி கார்த்திக்