வாழை படத்தால் வாயடைத்துப்போன விஜய்சேதுபதி! என்ன சொன்னார் தெரியுமா..!
மாரி செல்வராஜ் இயக்கத்தில், நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த திரைப்படம் வாழை. வாழை தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும், இதுவரை இல்லாத வகையில், ஒருத்தர்விடாமல், படத்தை பார்த்த அனைவரும், கண்ணீருடன் தான் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்தை நடிகர் விஜய்சேதுபதி பார்த்துள்ளார்.
படத்தை பார்த்த பிறகு, மேடையில் ஏறி, விஜய்சேதுபதி பேசியிருந்தார். அப்போது, “வாழை ஒரு அற்புதமான படம். இந்த படத்தை பார்த்து முடித்த பிறகும், அந்த படத்திற்குள்ளேயே நான் இருக்கிறேன்.
இந்த மாதிரி படத்தை எடுத்த மாரி செல்வராஜ்-க்கு நன்றி” என்று தெரிவித்தார். மேலும், இதுபோன்ற செய்திகளை ஊடகத்தில், நாம் சாதாரணமாக பார்த்திருப்போம். ஆனால், அதனை மிகவும் அழுத்தம் திருத்தமாக மாரி செல்வராஜ் பதிவு செய்திருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.
-பவானி கார்த்திக்