திருமணம் ஆன புதுமண தம்பதிகளுக்கு நேர்ந்த கொடூரம்..!! பரபரப்பில் தூத்துக்குடி..!
தூத்துக்குடி மாவட்டம் முருகேசன் நகர் பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் வயது 23 இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகா என்ற 21 வயது பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்..
கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துக்கொண்டனர்..,
நேற்று இரவு, இந்த புதுமண தம்பதிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலையின் பின்னணி :
கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய கார்த்திகா, மாரிச் செல்வத்தை திருமணம் செய்துள்ளார்.
மாரி செல்வத்தின் காதலை அவரின் பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்..,
இந்நிலையில் நேற்று இரவு கார்த்திகா மாரிச்செல்வம் தம்பதி இல்லற வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்..
அப்போது அடையாளம் தெரியாத அளவிற்கு மூன்று மர்ம நபர்கள் திடீரென வீட்டிற்குள் நுழைந்து, கையில் வைத்திருந்த அரிவாளால் மாரிச் செல்வம், மற்றும் கார்த்திகாவை சரமாரியாக வெட்டியுள்ளனர்..
அவர்களை கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.
சத்தம் கேட்டு அங்கு வந்த மாரி செல்வத்தின் பெற்றோர் போலிசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.., தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் போலீசார் கார்த்திகா, மாரிச் செல்வம் ஜோடியின் உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
பின் மாரிச்செல்வத்தின் பெற்றோரிடம் விசாரணை செய்த போலீசார்.., சந்தேகத்தின் பெயரில் கார்த்திகாவின் பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்..
விசாரணையில் உடைந்த உண்மை :
விசாரணையின் போதே பல திட்டுக்கீடும் தகவல்கள் வெளியாகின.., பெற்ற மகள் கீழ் சாதி பையனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டதால்.., கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
பின் கொலை செய்த மர்ம நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..