கிரக தோஷங்கள் நீக்கும் மந்திரமூர்த்தி..!! தாமிரபரணி ஆற்றின் சிறப்பு..!!
மனித வாழ்வில் பல பிரச்சனைகள் இருந்தாலும் உடலில் ஏற்படும் பிரச்சனையே அதிகம். உடல் பிரச்சனை மற்றும் மன பிரச்சனை நீங்க திருநெல்வேலி மாவட்டம் மேல ஓமநல்லூர் மந்திர மூர்த்தியை தரிசனம் செய்தால் சிறந்தது.
கோயில் தோன்றிய வரலாறு :
ரேணு முனிவரின் வேண்டுதலுக்காக கங்கை அவருக்கு மகளாக பிறந்தார். அவருக்கு ஆதிரை என பெயரிட்ட முனிவர் சிவனின் பக்தியாக வளர்த்து வந்தார்.
இந்நிலையில் அப்பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னர் குழந்தை இல்லாமல் தவித்துள்ளார். ஒரு முறை ஆதிரையை பார்த்ததும் தன் மகளாய் தத்தெடுத்து சென்று வளர்த்து வந்துள்ளார். அப்போது காட்சி கொடுத்த சிவபெருமான் மந்திரேசுரம் என்ற இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
தாமிரபரணியின் புகழ் :
மகளின் பிரிவால் மன்னர் உயிரை விட துணிந்தபோது, நீ தாமிரபரணி ஆற்றில் யாகம் செய்தால் உன் மகள் உன் கண் முன் தோன்றுவாள் என ஒரு குரல் ஒழித்துள்ளது. அதன் படி மன்னரும் தாமிரபரணி ஆற்றில் யாகம் செய்துள்ளார். அதன் பின் ஆதிரை சிவனுடன் மணக்கோலத்தில் காட்சியளித்துள்ளார்.
மகளைப் பிரியப் போகிறோமே என மன்னர் நினைத்து வருந்தியதை உணர்ந்த சிவபெருமான் ஆதிரையை ஆறாக்கி வயிரமலையில் ஓடச் செய்தார். அப்போது அந்த ஆறு தாமிரபரணியுடன் சேர்ந்து மந்திரேசுரம் கோயிலைக் கடந்து சென்றது.
அதன் பின்னரே தேவசிற்பியான மயனால் மேலஓமநல்லுாரில் கோவில் கட்டப்பட்டது. கருவறையில் ஆமை ஓட்டின் வடிவமாக சுயம்பு மேனியாக மூலவர் இருக்கிறார்.
பிரணவேஸ்வரர், மந்திரமூர்த்தி என்பது சுவாமியின் திருநாமம்.
கோவிலின் சிறப்பு :
ஏவல், பில்லி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வில்வமாலை சாத்துகின்றனர். அம்மனின் திருநாமம் செண்பகவல்லி. திருமணத்தடையை போக்குபவள் இவள். அகத்தியர், உரோமஷ முனிவர்கள் தரிசித்துள்ளனர். சுவாமி, அம்மனின் பாதங்களில் நம் ஜாதகத்தை வைத்து வழிபட கிரக தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..