தமிழ்நாட்டு மன்மதனே..! என்றும் ரசிகர்கள் அண்ணனே..! தளபதி 50..!
தமிழ்நாட்டின் அழகிய தமிழ் மகன்., இவர் படங்கள் வெளிவந்தாலே அது ரசிகர்களுக்கு “குஷி” மட்டுமல்ல கொண்டாட்டம் என சொல்லலாம்.. காரணம் இவர் பல தங்கை தம்பிகளுக்கு அண்ணன்.., இன்றைய யூத் களிடம் காதலுக்கு மரியாதை கொடுக்க சொன்னவர். இவரின் மீது பலர் அன்பு வைத்தாலும். இவருக்கும் பிரியமானவள் என்று ஒருவர் இருக்கிறார்.
ஒரு குருவி பறந்து சென்ற போது சுறாவிடம் சிக்கிய போது உதவியது என்னவோ அவரின் நண்பர்கள் தான்., ஒவ்வொரு பாடலும் ஒன்ஸ் மோர் கேட்க வைத்தாலும் பூவே உனக்காக நான் காத்திருக்கிறேன் என்று சொன்னார்.., இவரை கண்டால் துள்ளாத மனமும் துள்ளும் என ரசிகர்கள் சொல்ல காரணம்.., என்று இவர் ரசிகர்களை “நெஞ்சில் குடி வைத்திருப்பதால்” தான்.
லவ் டுடே வந்தாலும்.., தன்னை காதலிக்காத பெண்ணை வேறு ஒரு ஷாஜகன் சேர்த்து வைத்து காதலை வாழ வைத்தவர்.., காதலுக்கு மரியாதை கொடுக்க தெரிந்த இவர் என்றும் இளைஞர்களின் சிறந்த தலைவா என வாழ்கிறார்.
இவரின் சர்கார் பலருக்கும் பிடிக்காமல் போனாலும் இவரின் கத்தி வேற ரகம் என்பதால் என்றும் இவர் மெர்சல் நாயகனாக இருக்கிறார்.. சினிமாவில் பலரின் அன்பை பெற்ற “தளபதி விஜய்” தற்போது அரசியலிலும் களம் காணுகிறார்..
விஜய் மக்கள் இயக்கம் மூலம் இதுவரை பல்வேறு உதவிகளை செய்து வந்த தளபதி விஜய்.. தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் கடந்த ஆண்டு முதல் இன்னும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்..
சினிமாவில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருக்கும் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான “தளபதி விஜய்” அவர்களுக்கு ரசிகர்கள் சார்பாகவும் மதிமுகம் குடும்பத்தினர் சார்பாகவும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..