ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த தளபதி விஜய்..! அந்த மனசு தான் சார் கடவுள்..!
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த கள்ளசாராயத்தை அருந்தியவர்கள் கடந்த 18ம் தேதி இரவு உடல் நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 115 பேர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான தளபதி விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் ”கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது வேதனை அளிக்கிறது.
இது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முன்னதாகவே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால்.. இன்று மீண்டும் இப்படி ஒரு துயர சம்பம் நடந்திருக்காது.. எனவே இந்த முறை இது சமந்தபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசிடம் கேட்டுகொள்கிறேன்..
என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான தளபதி விஜய் கேட்டுக் கொள்கிறேன்” என நேற்று பதிவிட்டிருந்தார்…
இந்நிலையில் தளபதி விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் நடந்த துயர சம்பவமான “கள்ளகுறிச்சி கள்ள சாராயம்” அருந்தி 50 பேர் உயிர் இழந்தநிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடுவதை விட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்யுமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்..
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..