மீண்டும் வெடிக்க தொடங்கிய மணிப்பூர் கலவரம்..!! பரிதாபமாக உயிர் இழந்த இளைஞர்கள்
மலைவாழ் பழங்குடியினரின் உரிமையைப் பாது காப்பதற்காக 3.5.2023 அன்று மணிப்பூர் அனைத்துப் பழங்குடி இட மாணவர் கூட்டமைப்பு (All Tribal Students’ Union Manipur) (ATSUM) சார்பில் மலைவாழ் பழங்குடியினரின் ஒற்றுமைப் பேரணியை எட்டு மலை மாவட்டங்களில் நடத்தினர்.
பா.ஜ.க ஆட்சியின் ஆதரவோடு மெய்த்தேயி குழுவினர் பழங்குடி மக்கள் மீது மிகப்பெரியத் தாக்குலை நடத்தினர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையில் மிகப்பெரிய வன்முறை மூண்டது.
3.5.2023 அன்று தொடங்கிய வன்முறைப் போராட்டம் இன்று வரை தொடருகிறது. அந்த மேல் முறையீட்டு வழக்குகளை அனைத்து இந்திய பழங்குடி மாணவர் சங்கத்தின் தலைவர் பட்டின்தாங் லூபெங் (Paotin thang Lupheng) தொடர்ந்து நடத்தி வருகிறார்.
7.5.2023 அன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “எந்த மாநிலத் திற்கும் எவர் எவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான அதிகாரம் நீதித்துறைக்கு இல்லை என்று உச்சநீதிமன்றத்தின் அரசமைப்பு அமர்வு பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளதை எடுத்துக்காட்டி மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறானது” என்று தீர்ப்பளித்தார்.
மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் அந்தத் தவறான தீர்ப்புதான் மே மாதம் 3-ஆம் நாள் நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட வன்முறைக்கு மூலக்காரணமாகும். இதனை தொடர்ந்து பெண்ணை நிர்வாணமாக்கி இழுத்து செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த கொடூர சம்பவம் குறித்து முடிவுக்கு வராமல் இருக்கும் நிலையில்.
இதனை தொடர்ந்து மீண்டும் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. உக்ருல் நகரத்தில் சுமார் 47கிமீ தொலைவில் இருக்கும் குக்கி பழங்குடியின கிராம தெளிவாயிப்பில் அதிகாலை 4:30 மணி அளவில் திடீரென துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று துப்பாக்கியுடன் கிழக்கு மலைப்பகுதியில் இருக்கும் குக்கி நோக்கி வந்ததாகவும்.., அங்கு காவலுக்கு நின்று கொண்டிருந்த இளைஞர்களை சரமாரியாக சுட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார் சோதனை நடத்திய போது.., வனப்பகுதியில் பாதுகாப்பிற்கு நின்று கொண்டிருந்த 25 முதல் 35 வயது மிக்க இளைஞர்கள் உடலை மீட்டுள்ளனர். இதுவரை 190 பேர் கொல்லப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post