ராயப்பேட்டை பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால் பட்ட பகலில் பட்டாகத்தியால் வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டை சைவ முத்தையா தெருவில் வசித்து வருபவர் கும்மு என்ற குமரேசன் வயது 33 இவர் சென்னை மாவட்ட பெரியார் திராவிட கழகத்தின் இளைஞர் அணி செயலாளராக இருந்து வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தந்தை பெரியார் திராவிட கழக சென்னை மாவட்ட செயலாளர் டிங்கர் குமரன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இருவரும் ஏற்கனவே ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்து நிலுவையில் உள்ள நிலையில் நேற்று மாலை ராயப்பேட்டை சைவ முத்தையா தெருவில் குமரேசன் நடந்து சென்ற போது டிங்கர் குமரன் மற்றும் அவரது கூட்டாளிகளான மனோஜ் தமிழ்ச்செல்வி மெக்கானிக் சுரேஷ் பாங்கு ராஜா தீபன் பிரசாந்த் ஆகியோர் வழிமறித்து அரிவாள் மற்றும் பட்டாகத்தியால் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் கழுத்து உள்ளிட்ட உடல் முழுவதும் வெட்டு காயங்களுடன் சென்னை ராயபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர மேல் சிகிச்சைக்காக தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே டிங்கர் குமரனுக்கும் குமரேசனுக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது வீட்டில் குப்பை கொட்டுவது தொடர்பாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் குமரேசனிடம் டிங்கர் குமரன் 15 லட்ச ரூபாய் கடனாக பெற்று திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து குமரேசன் பணத்தை திருப்பி கேட்டதால் அடிக்கடி இரு தரப்பினரும் தாக்கிக் கொள்ளும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறிய நிலையில் நேற்று குமரேசனை டிங்கர் குமரன் ஆட்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை வெறி தாக்குதல் நடத்திய டிங்கர் குமரன் உள்ளிட்ட அவரது அடியாட்கள் தப்பியோடி தலைமுறைவாகியுள்ளனர் ஐஸ் அவுஸ் காவல்துறையினர் தாக்கிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சைவ முத்தையா தெருவில் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும் நிலையில் குமரேசனை கொலை வெறி தாக்குதல் நடத்திய வீடியோ காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது