ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவிகள் உயிரிழந்தனர். பாகிஸ்தான் தூதரகத்தை மூட இந்தியா உத்தவிட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகமும் மூடப்பட்டது. இந்த நிலையில், டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்குள் அதிகாரி ஒருவர் கேக் கொண்டு சென்றார்.
அவரிடம் செய்தியாளர்கள் என்ன காரணத்திற்காக கேக் கொண்டு செல்கிறீர்கள்? என்று கேட்டதற்கு அவர் எந்த வித பதிலும் சொல்லவில்லை. செய்தியாளர்கள் சுற்றி சுற்றி நின்று கேள்வி கேட்டும் அவர் பதில் சொல்லவில்லை. செய்தியாளர்களிடத்தில் தப்பி உள்ளே கேக்கை கொண்டு சென்றார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கதாக சொல்லப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் இப்போது கராச்சி கடற்கரையில் பாகிஸ்தான் இன்றும், நாளையும் ஏவுகணை சோதனை நடத்துவதாக அறிவித்துள்ளது.
ஜம்மு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக சொல்லப்படும் லஷ்கர்-இ-தொய்பா துணைத் தலைவர் சைஃபுல்லா கசூரி வெளியிட்டுள்ள வீடியோவில் ,’ ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். காஷ்மீர் தாக்குதலில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை. பாகிஸ்தானில் அமைதியைக் குலைக்க யாரோ முயற்சி செய்கிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.