பொள்ளாச்சியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது..
பொள்ளாச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை தமிழக எல்லையான கேரள பகுதியில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்வதாக காவல் துறையினர் ரகசிய தகவல் கிடைத்தது.
இதை அடுத்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சந்தேகத்திற்ககு இடமாக, கையில் பையுடன் வந்த சூளேஸ்வரன்பட்டி பகுதியைச் சேர்ந்த சபரிநாதன் என்பவரை பிடித்த சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் அவரிடம் 86 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கேரள லாட்டரிகள் இருப்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து, அவரை கைது செய்த காவல் துறையினர் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.