தனியாக இருந்த 50 வயது பெண்.. திடீரென புகுந்த மர்ம நபர்கள்..
சென்னை அருகே உள்ள போரூர் பகுதியை சேர்ந்தவர் சாந்தி. 50 வயதாகும் இவர், 2 மாடிக் கொண்ட, சொந்த வீட்டில் வசித்து வருகிறார். தரைத் தளத்தில் தனியாக வசித்து வரும் இவர், முதல் மற்றும் இரண்டாவது மாடி வீட்டில், சிலர் வாடகைக்கு இருந்து வருகின்றனர்.
மிகவும் பாதுகாப்பான முறையில் இருக்கும் இவரது வீட்டில், பொருட்களை திருடுவது என்பது மிகவும் கடினமான காரியம். ஆனால், சம்பவத்தன்று, வீட்டின் வெளிப்புற கேட், திறந்து கிடந்துள்ளது.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், உள்ளே நுழைந்து, தனியாக கிடந்த சாந்தியின் கால்களை, கட்டியுள்ளனர். இதையடுத்து, அவர் அணிந்திருந்த 10 சவரன் நகை, வீட்டில் இருந்த 15 சவரன் நகை ஆகியவற்றை, திருடிச் சென்றுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக, வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”