பொன்னியின் செல்வன் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்த நிலையில் நடிகர் விக்ரம் பல மொழிகளில் நன்றி சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போடுகிறது. இந்த படத்தில் நடித்துள்ள விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா அனைத்து கதாபாத்திரங்களும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அன்பு இதயங்களுக்கு என் இதய நன்றி. #PonniyanSelvan #ManiRatnam @LycaProductions @arrahman @actor_jayamravi @Karthi_Offl @trishtrashers #AishwaryaRaiBachchan pic.twitter.com/YxJczs44gh
— Aditha Karikalan (@chiyaan) October 1, 2022
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் விக்ரம் தனது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்புக்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் நன்றி, தேங்க்ஸ், தன்யவாத், என பல மொழியில் சொன்னாலும், கேட்பதற்கு உணர்வதற்கும் நன்றாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார். பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த வரவேற்பு ஆதித்த கரிகாலனுக்கு கிடைத்த அந்த ஆக்ரோஷமான பின்னூட்டம் ரொம்ப நன்றி.
தான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். நிறைய நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறேன். எல்லா படங்களையும், என் படம், என்னுடைய கதாபாத்திரம் என பெருமைப்படுவேன். எல்லோரும் இது எங்களுடைய படம் என கொண்டாடுவது எனக்கு பெரிய மகிழ்ச்சி. படக்குழு உள்ளிட்டவர்களுக்கு இயக்குனர் மணிரத்னத்திற்கு நன்றி கூறியுள்ளார் என நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.