அகில இந்திய காங்கிரஸ் தலைவரானார் மல்லிகார்ஜுன கார்கே. பா.ஜ.க. கட்சியின் எழுச்சியால் சமீப காலமாக காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் தனது ஆட்சியை இழந்து வருகிறது. இந்நிலையில் 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோசமான தோல்வியை பெற்றது. அதை தொடர்ந்து பல தேர்தலைகளில் பல மாநிலங்களில் வெற்றியை இழந்தது, இந்நிலையில் காங்கிரஸின் தலைவராக இருந்த ராகுல் காந்தி மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
நேரு குடும்பத்தில் யாரும் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடாத நிலையில் கடந்த வாரம் அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. தலைவருக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் போட்டியிட்டனர். 19ம் தேதி வாக்குகள் எண்ணிக்கையில் வெற்றி பெற்ற மல்லிகார்ஜுன கார்கே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து இன்று காங்கிரஸ் தலைமையகத்தில் பதவி ஏற்றார். இதில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி என்ற மூத்த தலைவர்களும் கலந்துகொண்டனர். இரு மாநிலங்களில் மட்டும் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மீண்டும் எழுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அடுத்த மாதம் நவ.12ம் தேதி ஒரே கட்டமாக இமாச்சலப்பிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குஜராத் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் மல்லிகார்ஜுன கார்கே தலைவராகிறார். மேலும் அடுத்த அடுத்து தேர்தல்கள் வரும் நிலையில் மல்லிகார்ஜுன கார்கே வின் நகர்வுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் சூழ்ந்துள்ளது.
24 ஆண்டுகளுக்கு பிறகு ராஜீவ் காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது